என் மலர்
செய்திகள்

திருத்தணி அருகே இளம்பெண் அடித்து கொலை
பள்ளிப்பட்டு:
திருத்தணியை அடுத்த பட்டா பிராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன். லாரி டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன லட்சுமி அருகில் உள்ள மேல்முருக்கம்பட்டு கிராமத்தில் வசிக்கும் தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள ஏரியில் தனலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது தலையில் கல்லால் தாக்கியதற்கான காயம் இருந்தது. கழுத்து சேலையால் இறுக்கி காணப்பட்டது.
இது குறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தனலட்சுமியை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் பார்த்தீபனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் தனலட்சுமியை கடத்தி கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடக்கிறது.
ஏரியில் இளம் பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.