என் மலர்

  செய்திகள்

  வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய என்ஜினீயர் மீது புகார்
  X

  வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய என்ஜினீயர் மீது புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய என்ஜினீயர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
  தேனி:

  தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி. என்ஜினீயரான இவருக்கும் தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகள் லட்சுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

  திருமணத்தின்போது 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு சில மாதங்கள் கழித்து பாலாஜி தான் வேலை பார்க்கும் கத்தார் நாட்டிற்கு மனைவியை அழைத்து சென்றார்.

  விசா முடிந்ததும் மனைவியுடன் அவர் ஊர் திரும்பினார். இந்த நிலையில் மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.

  கூடுதலாக 10 பவுன் நகையும், பணமும் வாங்கி வந்தால்தான் உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என்று பாலாஜி மனைவியை மிரட்டியுள்ளார்.

  இதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து லட்சுமி தாய் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை அழுது முறையிட்டார்.

  இதையடுத்து அவர் தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் லட்சுமியின் கணவர் பாலாஜி, மாமியார் மகாதேவி, நாத்தனார் பாலாலட்சுமி, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×