என் மலர்
செய்திகள்

சென்னையில் ரூ.85 லட்சம் நிலம் அபகரிப்பு: கணவன்-மனைவி கைது
போலி வங்கி வரைவோலைகளை கொடுத்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் நெல்சன் மோகன்ராஜ் (வயது 53). இவருக்கு சொந்தமான நிலத்தை, சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவர், தனது மனைவி மகேஸ்வரி பெயரில் வாங்கினார். அதற்கு அவர் ரூ.85 லட்சத்திற்கு இரண்டு வங்கி வரைவோலைகள் (டிமாண்ட் டிராப்ட்) கொடுத்தார். அந்த வங்கி வரைவோலைகள் போலியானது என்று தெரியவந்தது. போலி வங்கி வரைவோலைகள் கொடுத்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துவிட்டதாக நெல்சன் மோகன்ராஜ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலி வங்கி வரைவோலைகளை கொடுத்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, சம்பத்குமார் (49), அவரது மனைவி மகேஸ்வரி (47) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story