என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ரெயில் மறியல் போராட்டம் எதிரொலி: 16 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
Byமாலை மலர்18 Oct 2016 5:28 AM IST (Updated: 18 Oct 2016 5:28 AM IST)
ரெயில் மறியல் போராட்டம் காரணமாக, 16 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் முதல்கட்ட ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக, நேற்று 16 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஒரு பயணிகள் ரெயிலும் பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
நேற்று ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்
* சென்னை எழும்பூர்-மன்னார்க்குடி மன்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16179)
* சென்னை எழும்பூர்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16175)
* சென்னை எழும்பூர்- வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் (16185)
* சென்னை எழும்பூர்- தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ் (16183)
* எர்ணாகுளம்- காரைக் கால் எக்ஸ்பிரஸ் (16188)
* மன்னார்குடி-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615)
* மன்னார்குடி-சென்னை எழும்பூர் மன்னை எக்ஸ்பிரஸ் (16180)
* தஞ்சை-சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16184)
* காரைக்கால்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16176)
* வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் லிங்க் எக்ஸ்பிரஸ் (16186)
* காரைக்கால்- லோக் மான்யா திலக் எக்ஸ்பிரஸ் (11018)
* மன்னார்குடி-மகத் கி கோதி எக்ஸ்பிரஸ் (16864)
* காரைக்கால்-எர்ணாகுளம் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் (16187)
இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படும் ரெயில்கள்
* கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் (16616)
* சென்னை எழும்பூர்- திருச்சி எக்ஸ்பிரஸ் (16853)
* திருச்சி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16854)
அதேநேரத்தில் காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரெயில் (56513) காரைக்கால்-சிதம்பரம் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16859) நேற்று எழும்பூர்-திருச்சி இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டது. பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரெயில் (56514), நேற்று சிதம்பரம்-காரைக்கால் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16105/06) இருமார்க்கமாகவும், சென்னை எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16101/02) மற்றும் ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (16780) ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
மேற்கண்டவாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story
×