என் மலர்

  செய்திகள்

  குற்றாலம் மலையில் வாலிபர் பிணம் மீட்பு: அடித்துக்கொலையா?
  X

  குற்றாலம் மலையில் வாலிபர் பிணம் மீட்பு: அடித்துக்கொலையா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குற்றாலம் மலையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  தென்காசி:

  நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி சுப்பிர மணியன், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு குற்றாலம் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

  அப்போது அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவர் பேன்ட், சட்டை அணிந்திருந்தார். தலை அழுகி அடையாளம் தெரியாத நிலையில் எலும்பு கூடாக கிடந்தது. உடல் சதைகளும் அழுகி துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வாலிபர் இறந்து சுமார் 40 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரது உடலின் குடல் மற்றும் முக்கிய பாகங்களை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

  அந்த வாலிபர் கிடந்த இடம் அடர்ந்த காட்டு பகுதியாகும். அங்கு வந்து விஷம் குடித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இதனால் இவரை இங்கு கடத்தி வந்து அடித்து கொலை செய்து இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையானவரின் பேண்ட், சட்டையில் உள்ள டெய்லர் கடை முகவரியை வைத்து அந்த பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளனரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் தெரிந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவரும்.

  இதுபோல சிவகிரி மலை பகுதியில் 25 வயதுள்ள ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது பெயர் விபரம் தெரியவில்லை. அவரது உடலும் சற்று அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×