என் மலர்

  செய்திகள்

  நெல்லையில் ரெயில் மறியல் போராட்டம்- 600 பேர் கைது
  X

  நெல்லையில் ரெயில் மறியல் போராட்டம்- 600 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பல்வேறு கட்சியினர் இன்று ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

  நெல்லை:

  தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில், அவைத்தலைவர் அப்பாவு, டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், ராஜம் ஜாண், ப.அ.சரவணன், பொருளா ளர் ஞானதிரவியம், வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், ஆறுமுகம், தங்கபாண்டியன், சித்திக் சரஸ்வதி நாராயணன், வேலு, களக்காடு ராஜன், ஆலங்குளம் செல்லத்துரை, மாரிவண்ணமுத்து, அம்பை சிவகுருநாதன், பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  சந்திப்பு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் தி.மு.க.வினர் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

  இன்று மாலை தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

  காங்கிரஸ் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில், வாகை கணேசன், ராஜேஷ், முருகன், ராஜா, காவேரி, சொக்கலிங்க குமார், காமராஜ், வேணு கோபால் உள்பட ஏராளமானோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

  மக்கள் நலக்கூட்டணியினர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் ஆகியோர் தலைமையில் ரெயில் மறியல் போராட்டதில் ஈடுபட முயன்றனர். இதில் ம.தி.மு.க. நிர்வாகிகள் மணி, கல்லத்தியான், வடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தியாகராஜன், பழனி, இந்திய கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  சந்திப்பு ரெயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள் நலக்கூட்டணியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் மக்கள் நலக்கூட்டணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

  த.மா.கா. மாநில செயலாளர் சார்லஸ் தலைமையில் அக்கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான த.மா.கா. வினரை போலீசார் கைது செய்தனர்.

  நெல்லையில் ரெயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பிரதீப்குமார் தலைமையில், கூடுதல் துணை கமி‌ஷனர் இளங்கோ, உதவி ஆணையாளர்கள் மாரிமுத்து, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டி ருந்தனர்.

  Next Story
  ×