என் மலர்
செய்திகள்

அண்ணாநகரில் முதலாளி வீட்டில் நகை திருடிய கார் டிரைவர்-நண்பர் கைது
அண்ணாநகரில் முதலாளி வீட்டில் நகை திருடிய கார் டிரைவர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
அண்ணாநகர் டபிள்யூ பிளாக், 4-வது தெருவில் வசித்து வருபவர் விஜய குமார். கடந்த 9-7-2016 அன்று இவரது வீட்டில் 75 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 8.30 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. காரையும் கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் வீட்டில் டிரைவராக வேலை பார்த்த இளங்கோவை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த நண்பர் சண்முகமும் சிக்கினார். அவர்களிடமிருந்து 65 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2 லட்சம், மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story