என் மலர்
செய்திகள்

கரூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆலோசனை கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது.
கரூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கரூரில் நடந்தது. பாராளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் ஜெயராமன் தலைமை தாங்கினார். ராமச்சந்திரன், ரிபாய்தீன் ஹசனீ, சந்தானம், செய்தி தொடர்பாளர் இளங்கோ, சுரேந்தர், கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சென்னையில் நடைபெற உள்ள தேசிய தலித் மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பது, கட்டி முடிக்கப்பட்ட பசுபதிபாளையம் மேம்பாலம் மற்றும் கரூர் நகராட்சி 45-வது வார்டில் அமைந்துள்ள சமுதாய கூடம் ஆகியவற்றினை உடனே திறக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story