என் மலர்

  செய்திகள்

  வலங்கைமானில் செல்போன் கடையில் திருட்டு
  X

  வலங்கைமானில் செல்போன் கடையில் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வலங்கைமானில் செல்போன் கடையில் இருந்த பணம் மற்றும் ரீசார்ஜ்கார்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

  வலங்கைமான்:

  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் காளியம்மன்கோவில் அருகே கோபி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் செல்போன்களுக்கு தேவையான ரீசார்ஜ் கார்டுகள், உதிரிபாகங்கள், பழுதுநீக்கும் தொழில், மற்றும் புதிய செல்போன்கள் விற்பனை செய்து வருகிறார்.

  இந்நிலையில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று காலையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடையின் பூட்டு உடைக்கபட்டுள்ளதை கோபியிடம் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த பணம் மற்றும் செல்போன்கள், ரீசார்ஜ்கார்டுகள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×