என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலத்தில் திருமணம் ஆன 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ.விசாரணை
கொண்டலாம்பட்டி:
சேலம், குகையை அடுத்த கருங்கல்பட்டியில் உள்ள பாண்டுரங்கன்கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 30) இவர் அந்த பகுதியில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் துணிகளை தரம் பிரிக்கும் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சசி என்கிற சசிகலா (20). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று 5 மாதங்கள் ஆகிறது.
இந்த நிலையில், திருமணம் ஆனது முதல் கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சசிகலா நேற்று மாலையில் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், உதவி கமிஷனர் ரவீந்திரன் மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் சசிகலா தற்கொலை செய்துள்ளதால் சேலம் ஆர்.டி.ஓ.விஜய்பாபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.