search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் மோதி பலியான காண்டிராக்டர் குடும்பத்துக்கு ரூ.14½ லட்சம் இழப்பீடு: தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
    X

    கார் மோதி பலியான காண்டிராக்டர் குடும்பத்துக்கு ரூ.14½ லட்சம் இழப்பீடு: தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு

    கார் மோதி பலியான காண்டிராக்டர் குடும்பத்துக்கு ரூ.14½ லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 30). பெயிண்டிங் காண்டிராக்டர். கடந்த 7-4-2013 அன்று ஆராக்கியராஜ் மோட்டார்சைக்கிளில் வல்லம்- தஞ்சை சாலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஆரோக்கியராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நஷ்டஈடு வழங்குமாறு இறந்த ஆரோக்கியராஜின் மனைவி ஜெனிபர் தஞ்சை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பாலசுப்பிரமணியன் விசாரித்து ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் நஷ்டஈடாக வழங்குமாறு ஓரியண்டல் மற்றும் நே‌ஷனல் இன்சூரன்சு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

    தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள டேனியல்தாமஸ்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் விக்னேஷ் (12). தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-1-2012 அன்று விக்னேஷ் தனது உறவினருடன் தஞ்சை- மன்னார்குடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ விக்னேஷ் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சுப்பிரமணியன் நஷ்டஈடு கேட்டு தஞ்சை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பாலசுப்பிரமணியன் விசாரித்து ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு தனியார் இன்சூரன்சு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×