என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் தொழிலாளி தற்கொலை
    X

    நாகையில் தொழிலாளி தற்கொலை

    நாகையில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க பணம் இல்லாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் நயினார் நகர் பழைய காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55) தொழிலாளி. இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது.

    இந்நிலையில் சின்னசாமியிடம் மற்ற மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க போதிய பணம் இல்லை. இதில் மனமுடைந்த அவர் தனது 2 மகள்களையும் காரைக்காலில் உள்ள மகள் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×