search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு
    X

    கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு

    கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், என்.பு கழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம் பாளையம் பகுதிகளில் செயல்பட்டுவரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பிவைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர். 

    கடந்த  வாரம் கற்பூரி முதல் ரகம் வெற்றிலைரூ.2200-க்கும்,  இரண்டாவது ரகம் ரூ.900-க்கும் வாங்கி சென்றனர். அதே போல் வெள்ளைக்கொடி வெற்றிலை முதல் ரகம் ரூ.5000-க்கும், இரண்டாவது ரகம் ரூ.2500-க்கும் வாங்கி சென்றனர். இந்த வாரம் கற்பூரி முதல் ரகம் வெற்றிலை ரூ.3100-க்கும்,  இரண்டாவது ரகம்   ரூ.1100-க்கும் வாங்கி சென்றனர். அதேபோல் வெள்ளைக்கொடி வெற்றிலை முதல் ரகம் ரூ.6000-க்கும், இரண்டாவது ரகம் ரூ.3000-க்கும் வாங்கி சென்றனர்.
    Next Story
    ×