என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தொழிலாளி பிணமாக கிடந்தார்: போலீசார் விசாரணை
    X

    ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தொழிலாளி பிணமாக கிடந்தார்: போலீசார் விசாரணை

    திட்டச்சேரி அருகே ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தொழிலாளி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள பாமநல்லூர் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கையன் (45) தொழிலாளி.இவர் கடந்த 25.10.15 அன்று திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பாமநல்லூரில் உள்ள குட்டை அருகே எலும்பு கூடுகள் கிடப்பதாகவும் அதன் அருகில் லுங்கி கிடப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் திட்டச்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து தங்கையன் மனைவி லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து எலும்புக்கூடு அருகில் கிடந்த லுங்கியை பார்த்து இது தனது கணவர் லுங்கி தான் என அடையாளம் கூறினார்.

    தங்கையன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×