என் மலர்
செய்திகள்

குன்னூரில் கனமழை: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம்
குன்னூரில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாலம் இடிந்தது. இடிந்த சில வினாடிகளில் ஆற்றுவெள்ளத்தில் பாலம் அடித்துசெல்லபட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது.
குன்னூர் அருகே உள்ளது டெரமியா எஸ்டேட். இங்குள்ள ஆற்றில் பழமையான பாலம் உள்ளது.இந்த பாலத்தின் வழியே தான் தேயிலைச்செடிகளை ஏற்றிச்செல்வார்கள்.
நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாலம் இடிந்தது. இடிந்த சில வினாடிகளில் ஆற்றுவெள்ளத்தில் பாலம் அடித்துசெல்லபட்டது.
Next Story