என் மலர்

    செய்திகள்

    போத்தனூரில் செல்போனில் தந்தைக்கு அறிவுரை கூறிவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
    X

    போத்தனூரில் செல்போனில் தந்தைக்கு அறிவுரை கூறிவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போத்தனூரில் செல்போனில் தந்தைக்கு அறிவுரை கூறிவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை போத்தனூர் அன்னபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இவரது மகன் ஸ்ரீ முகேஷ் (வயது 15). இவரது தாய் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முகேஷ் செங்கோட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் ஸ்ரீமுகேஷ் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார்.

    பின்னர் தனது தந்தையிடம் தலைவலிப்பதாக அடிக்கடி கூறியுள்ளார். ஆனால் சரவணன் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீமுகேஷ் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த சரவணன் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீ முகேஷின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஸ்ரீமுகேஷின் செல்போனை மீட்டு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீமுகேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் தந்தைக்கு ஒரு ஆடியோவை பதிவு செய்து இருந்தார்.

    அதில் அன்புள்ள அப்பா.... எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. ஆகையால் தற்கொலை செய்து கொள்கிறேன். நீங்கள் இனிமேல் குடிக்க கூடாது. சொந்தமாக ஒரு வீடு கட்டுங்கள்.

    இவ்வாறு ஆடியோவில் கூறியிருந்தார். இதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×