என் மலர்

    செய்திகள்

    திருச்சி வரகனேரி பகுதியில் காய்கறி கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
    X

    திருச்சி வரகனேரி பகுதியில் காய்கறி கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சி வரகனேரி பகுதியில் காய்கறி கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருச்சி:

    திருச்சி வரகனேரி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 19) அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகீர்உசேன் (21), ஜாகீர் உசேன் (19), முகமது உசேன் ஆகியோர் காய்கறி வாங்க விக்னேஷின் கடைக்கு வந்துள்ளனர்.

    அங்கு விக்னேஷிடம் 3 பேரும் தகராறு செய்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விக்னேஷ் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காய்கறி கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×