என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வேலூர் அருகே திருட்டு வழக்கில் பிடித்த வாலிபரை விட்டுச் சென்ற ஆந்திர போலீஸ்
By
மாலை மலர்14 Oct 2016 10:03 AM GMT (Updated: 14 Oct 2016 10:34 AM GMT)

வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக பிடித்துச் சென்ற வாலிபரை, உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆந்திர போலீசார் விடுவித்தனர்.
வேலூர்:
ஆந்திர மாநிலத்தில் மோட்டார்சைக்கிள் திருடப்பட்ட வழக்கில் ஒருவரை அந்த மாநில போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் வேலூரை அடுத்த ஊசூர் சிவநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஆனால் வேலூர் மாவட்ட போலீசாருக்கு தெரிவிக்காமல் சிவநாதபுரத்திற்கு சாதாரண உடையில் வந்த ஆந்திர போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.
வழியில் ஊசூர் பஸ் நிறுத்தம் அருகே ஜீப்பை நிறுத்தி விட்டு ஒரு டீக்கடையில் ஆந்திர போலீசார் டீ வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிவநாதபுரத்தை சேர்ந்த வாலிபரின் உறவினர்கள் சிலர் தங்கள் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஆந்திர போலீஸ் ஜீப்பில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அது குறித்து கேட்டனர்.
அப்போது ஆந்திர போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசாரும், வாலிபரின் உறவினர்களும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த திடீர் மோதலில் ஆந்திர மாநில போலீசாரின் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் மற்றும் போலீசார் ஆந்திர போலீசாரையும், அந்த வாலிபரையும், ஜீப்பையும் மீட்டு, அரியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் திருட்டில் சம்பந்தம் இல்லை. அவர் திருட்டு வாகனம் ஒன்றை வாடகைக்கு வாங்கியது தெரியவந்தது. மேலும் வாலிபரை பிடித்து செல்ல உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து வாலிபரை விட்டு விட்டு ஆந்திர போலீசார் திரும்பி சென்றனர். ஜீப் தாக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் வாலிபரின் உறவினர்கள் மீது அரியூர் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

Next Story
×