என் மலர்
செய்திகள்

வெளியூர் செல்லும் பஸ்களை பிடிக்க 3 பஸ் நிலையங்களுக்கு 200 மாநகர பஸ்கள்
வெளி மாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 200 சிறப்பு இணைப்பு பேருந்துகளை 26-ந்தேதி, 27-ந்தேதி, 28-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இயக்க உள்ளது.
சென்னை:
தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் வருகிற 26-ந்தேதி, 27-ந்தேதி, 28-ந்தேதி ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள 3 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. அண்ணாநகர் (மேற்கு) பேருந்து நிலையம்.
2. தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையம்.
3. பூந்தமல்லி பேருந்து நிலையம்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட 3 பேருந்து நிலையங்கள் பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற் குறிப்பிட்டுள்ள 3 பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்றடையவும் வெளி மாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 200 சிறப்பு இணைப்பு பேருந்துகளை 26-ந்தேதி, 27-ந்தேதி, 28-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இயக்க உள்ளது.

Next Story