என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே எந்திரத்தில் சிக்கி பெண் பரிதாப சாவு: போலீசார் விசாரணை
    X

    கோபி அருகே எந்திரத்தில் சிக்கி பெண் பரிதாப சாவு: போலீசார் விசாரணை

    கோபி அருகே எந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னமணி (வயது 62).

    பெண் விவசாயியான இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது தண்ணீர் இரைக்கும் கம்பரசர் மோட்டரை (எந்திரத்தை) இயக்கினார். இதில் அவரது சேலை எந்திரத்தில் சிக்கி அவரையும் இழுத்து நசுக்கியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவு சின்னமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×