என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி
    X

    தாம்பரத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி

    தாம்பரத்தில் காதலியை சந்தித்த போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் கவுதம் (வயது 22). இவரது சொந்த ஊர் திருச்சி, கே.கே.நகர் பகுதி ஆகும்.

    கவுதம், பள்ளிக்கரணையில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற அவர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    பின்னர் அவர் தாம்பரம் சானடோரியத்தில் வசிக்கும் காதலியான உடன் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரது வீட்டிற்கு சென்றார். இருவரும் வீட்டின் 3-வது மாடியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கல்லூரி மாணவியை அவரது சகோதரி ஒருவர் அழைத்தார். உடனே மாணவி கீழே இறங்கி சென்றார். இதற்குள் பயந்து போன கவுதம் ஓடியதாக தெரிகிறது.

    இதில் நிலை தடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×