என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுக்குமாடி கட்டுமான பணியின் போது 12-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
    X

    அடுக்குமாடி கட்டுமான பணியின் போது 12-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

    அடுக்குமாடி கட்டுமான பணியின் போது 12-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியானர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த தையூர், செங்கன்மால் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த முத்தாகர்ஷேக் (22) பெயின்டிங் வேலை செய்து வந்தார். அவர் 12-வது மாடியில் கிரில் கேட்டிற்கு பெயின்டிங் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சரியான பாதுகாப்பு வசதியின்றி தனியார் நிறுவனம் வேலை வழங்கியதால் 12-வது மாடியிலிருந்து தொழிலாளி கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மேடவாக்கத்தைசேர்ந்த ஒப்பந்தக்காரர் சதாசிவம், மேனேஜர் ஜெயராமன், சூபர்வைசர் நரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×