என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
    X

    திருப்போரூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

    திருப்போரூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த சிறுங்குன்றம் கிராமம் செல்லியம்மன்கோயில் தெருவில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மகள் பவித்ரா (17). திருப்போரூர் அரசு மகளிர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்த பவித்ராவை சரியாக படிக்கவில்லை என அவருடைய அக்காள் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×