என் மலர்
செய்திகள்

பவானி அருகே மொபட் மோதி தொழிலாளி பலி
பவானி அருகே மொபட் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பவானி அருகே உள்ள சித்தாரை சேர்ந்தவர் சேஷய்யர் (வயது 62) பீடி சுற்றும் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் மேட்டூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு மொபட் சேஷய்யர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் சேஷய்யர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கே, சப்- இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






