என் மலர்
செய்திகள்

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு படையினர் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
சென்னை:
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு படையினர் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் மெட்ரோ ரெயிலில் திடீரென்று தீவிரவாதிகள் அச்சுறுத்தும் வேளையில் பயணிகளை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் செய்து காண்பித்தனர்.
3 குழுக்களாக பிரிந்து மெட்ரோ ரெயிலின் இருபுறமும் சென்று திடீரென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்து பயணிகளை காப்பாற்றுவது, நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குவது உள்ளிட்டவைகளை செய்துகாட்டியதை பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும், நவீன ரக ஏணி, ஜன்னல் கண்ணாடி உடைக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பயணிகளுக்கு காண்பித்தனர்.
ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story