என் மலர்
செய்திகள்

நாகை அருகே வாலிபர் மர்ம மரணம்
நாகை அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலத்தின் அடியில் 24 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது இறந்த வாலிபர் கூத்தாநல்லூரை சேர்ந்த நூர்முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்ணீரில் அடித்து வரப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






