என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் கணவர் மாயம்: மனைவி போலீசில் புகார்
    X

    கடலூரில் கணவர் மாயம்: மனைவி போலீசில் புகார்

    கடலூரில் கணவர் மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் வண்ணாரப் பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மெகபூப்உசேன் (வயது 23). வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    சம்பவத்தன்று மெகபூப் உசேன் மீண்டும் வெளிநாடு செல்வது சம்பந்தமாக ஒருவரை பார்த்து விட்டு வருவதாக மனைவி வஹீதாபானுவிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த வஹீதா பானு பல இடங்களில் கணவரை தேடினார். பலன் இல்லை.

    கணவர் மாயமானது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் வஹீதாபானு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மெகபூப் உசேனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×