என் மலர்

  செய்திகள்

  வேதாரண்யம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
  X

  வேதாரண்யம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேதாரண்யம்:

  வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வசந்தா (வயது 56). ராமு அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருப்பாராம். பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் (30) ராமுவின் சத்தம் தாங்கமுடியாமல் ராமுவை தட்டிக்கேட்டாராம்.

  அப்போது ராமு கீழே விழுந்து விட்டார். அதை பார்த்த ராமுவின் மனைவி வசந்தா ஏன் என் கணவரை அடித்தாய் என கேட்க, ஆத்திரமடைந்த கண்ணன் வசந்தாவை தரக்குறைவாக பேசி கையால் அடித்துள்ளார். இதில் கண் புருவத்தில் காயமடைந்த அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
  Next Story
  ×