என் மலர்
செய்திகள்

மாமூல் தகராறில் தி.மு.க. கவுன்சிலர் கொலை: ரவுடி உள்பட 8 பேர் கைது
தாம்பரம் அருகே மாமூல் தகராறில் தி.மு.க. கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார்நகரில் வசித்து வந்தவர் தனசேகரன். படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார்.
கடந்த 2-ந்தேதி காலை டேவிட் நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். அப்போது மர்மகும்பல் தனசேகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாமூல் கொடுக்க மறுத்ததால் தனசேகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கரசங்காலை சேர்ந்த ரவுடி அருண்குமார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். தனசேகரனிடம் மாமூல் கேட்டு அருண்குமார் மிரட்டி இருக்கிறார். ஆனால் தனசேகரன் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமாரை மர்ம கும்பல் கொலை செய்ய விரட்டி உள்ளது. இதில் தனசேகரனுக்கு தொடர்பு இருக்கலாம் என நினைத்து தீர்த்து கட்டிவிட்டதாக கைதானவர் தெரிவித்து உள்ளனர்.

Next Story