என் மலர்

  செய்திகள்

  த.பாண்டியன் பேட்டிஅளித்த காட்சி.
  X
  த.பாண்டியன் பேட்டிஅளித்த காட்சி.

  முதல்வர் பற்றி வீணான வதந்தியை பரப்ப வேண்டாம்: ஈரோட்டில் த.பாண்டியன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்வர் பற்றி வீணான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் த.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
  ஈரோடு:

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் த.பாண்டியன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  காவிரி நீர் பிரச்சனையில் பா.ஜனதா மேல்மட்ட பொறுப்பாளர்கள் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை தர மறுக்கிறார்கள்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போது மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இத்தனை நாள் எங்கே போனார்கள்? முல்லை பெரியாறுஅணை பிரச்சனையிலும் நியாயமான உரிமையை பெற்று தர மாட்டேன்கிறார்கள்.

  தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யும் போது தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்போம் என்று வாக்குறுதி கூறினார். இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.

  தமிழக முதல்வரின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளது என்று அப்பல்லோ மருத்துவ குழுவினர் தினமும் மாலை முதல்வரின் உடல்நிலை பற்றி கூறி வருகிறார்கள். அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  இதைவிட்டு வீணான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

  இவ்வாறு த.பாண்டியன் கூறினார்.
  Next Story
  ×