என் மலர்

  செய்திகள்

  நீலாங்கரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது
  X

  நீலாங்கரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலாங்கரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

  திருவான்மியூர்:

  நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் பல்கலைநகர் பீச் பகுதியைச் சேர்ந்தவர் தேவி.

  இவர் காலை வாக்கிங் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்தனர்.

  அதிர்ச்சி அடைந்த தேவி நகையை பறித்த வாலிபர் கையை கடித்தார். இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.

  இதை பார்த்த பொதுமக்கள் 2 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். உடனே 2 பேரும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.

  பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

  விசாரணையில் அவர்கள் பனையூர் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த யோகஷ்வரன், வெட்டு வாங்கேணி கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் இருவரும் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பதும் தெரியவந்தது.

  இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப் பறியில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×