என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகரில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    X

    பவானிசாகரில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அருகே உள்ள ஓரிச்சேரி புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் செந்தில் என்ற ஆறுமுகம் (வயது 26). திருமணம் ஆனவர். இவர் திருமணம் ஆனதை மறைத்து பவானிசாகர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    பின்னர் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று மேல்மருவத்தூர் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். செந்தில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. இது பற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் செந்திலுக்கு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதை கட்ட தவறினால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் இதை கட்டதவறினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் அரசு வக்ககீல் சுமதி ஆஜரானார்.
    Next Story
    ×