என் மலர்
செய்திகள்

பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
கடலூர் அருகே பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் தியாகவள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் அஞ்சுகா(வயது 18). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார்.
சம்பவத்தன்று அஞ்சுகா கல்லூரி முடிந்து வீட்டுக்கு தாமதமாக வந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஏன் தாமதமாக வருகிறாய்? என திட்டினர்.
இதில் மனமுடைந்த அஞ்சுகா வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஞ்சுகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story