என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்காவுக்கு 2 பெண் ஓநாய்கள் வந்தன
    X

    வண்டலூர் பூங்காவுக்கு 2 பெண் ஓநாய்கள் வந்தன

    விலங்குகள் பரிமாற்ற முறையில் வண்டலூர் பூங்காவுக்கு 2 பெண் ஓநாய்கள் வந்துள்ளதால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் 2 ஒநாய்கள் உள்ளன. ஒநாய்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

    விலங்குகள் பரிமாற்ற முறையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள சரணாலயத்தில் இருந்து 2 பெண் ஓநாய்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி வண்டலூர் பூங்காவிற்கு 2 ஓநாய்கள் கொண்டு வரப்பட்டன. அதனை ஊழியர்கள் ஏற்கனவே உள்ள ஓநாய்களுடன் அடைத்தனர். இதனால் பூங்காவில் ஒநாய்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

    இதேபோல் பூங்காவில் இருந்த ‘ராமா’ என்கிற 5 வயதான ஆண் வெள்ளைப் புலியை விலங்குகள் பரிமாற்ற முறையில் உதய்பூர் பூங்காவிற்கு கடந்த திங்கட்கிழமை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். அதனுடன் பராமரிப்பாளர் செல்வன் மற்றும் டாக்டர்கள் குழுவினரும் சென்று இருந்தனர்.

    வண்டலூர் பூங்காவிற்கு புதிய வரவாக வந்துள்ள ஓநாய்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×