என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிப்படை வசதிகள் செய்துதர கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவிகள் ஸ்டிரைக்
    X

    அடிப்படை வசதிகள் செய்துதர கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவிகள் ஸ்டிரைக்

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் டிப்ளமோ மருந்தியல் படிக்கும் மாணவிகள் 150 பேர் பல்கலைகழக வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்லி விடுதியில் தங்கி உள்ளனர். விடுதியில் கழிவறை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டவில்லை.

    இதையொட்டி இன்று காலை அந்த மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். கல்லூரியை புறக்கணித்துவிட்டு அவர்கள் விடுதி முன்பு திரண்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் விடுதி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் உத்தரவின்பேரில் துறை தலைவர்கள் விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    Next Story
    ×