என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே தீக்குளித்து பெண் பலி
    X

    நாகை அருகே தீக்குளித்து பெண் பலி

    நாகை அருகே தீக்குளித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த பாலையூர் காந்தி நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி விஜயா (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அமிர் தலிங்கம் கடந்த 4 வருடத்திற்கு முன்பு கிட்டினி பாதிப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து இவரது 2-வது மகன் ஹரிதாஸ், 2 வருடத்திற்கு முன்பு கிட்டினி பாதிப்பால் இறந்தார். இதனால் விஜயா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இவரது மூத்த மகன் காளிதாஸ் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காளிதாஸ் கல்லூரிக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விஜயா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பாலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×