என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி
வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சரகம், குரவப்புலம் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி (65). இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்தும் குழந்தை இல்லாத நிலையில் தனது சகோதரியின் மகளான புஷ்பவள்ளியை வளர்ப்பு மகளாக பாவித்து அவரது வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை தம்புசாமி வீட்டை விட்டு சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் வீட்டின் அருகேயுள்ள வேவேரி பிளக் குளத்தில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பசுபதி உட்பட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story






