என் மலர்
செய்திகள்

தமிழக முதல்வர் பூரண குணம் அடைய வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி அரியலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அரியலூர்:
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மாவட்ட அதிமுக சார்பில் பெருமாள் கோவிலிலும், மகளிர் அணி சார்பில் செட்டி ஏரிக்கரை விநாயகர் கோவிலிலும், மாணவர் அணி சார்பில் மார்கெட் தெரு மாங்காய் பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி சங்கர் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்வராசு, நகர செயலாளர் கண்ணன் , மீனவரணி நாகராஜன், வக்கீல் பிரிவு வெங்கடாஜலபதி, வக்கீல் சாந்தி, ஒன்றிய வக்கீல் ஜெயக்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர தலைவர் வேலுசாமி, நகர பொருளாளர் செந்தில், நகராட்சி கவுன்சிலர் கருணாநிதி, குமார், மாணவரணி முருகேஷன், எம்.ஜி.ஆர். மன்றம் பழனியாண்டி, மணிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






