என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்
    X

    நாகை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்

    நாகை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக இறந்ததால் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள திருப்பூண்டி காலனி தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி அமுதா (22). முரளி திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அதே கம்பெனியில் அமுதா வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. அமுதாவின் சொந்த ஊர் கோவை ஆகும்.

    கடந்த சில நாட்களுக்கு முன் முரளியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அமுதாவின் தாய் சாந்தி, முரளியின் தாயார் நீலாவதி, சகோதரி லதா ஆகியோர் வந்து இருந்தனர்.

    அப்போது அமுதாவிடம் 10 பவுன் சீர்வரிசை கேட்டதாக கூறப்படுகிறது. பெயர் சூட்டு விழா முடிந்து அமுதாவின் தாய் சொந்த ஊர் திரும்பிவிட்டார்.

    இந்த நிலையில் அமுதா மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதனை கேள்விப்பட்டதும் அவரது தாய் திருப்பூண்டி வந்தார். அவர் கீழையூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×