என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம்
    X

    சீர்காழியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

    சீர்காழியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர். வெறிநாயை பிடிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த நந்தியநல்லூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 80). அதே பகுதி அக்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (75). இவர்கள் நேற்று நந்தியநல்லூரில் மண்எண்ணெய் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த வெறிநாய் ஒன்று இவர்களை கடித்தது. அதே போல் அந்த வழியாக சென்ற புவனேந்திரன் (15) என்பவரையும் கடித்து குதறியது. இதையடுத்து காயமடைந்த அவர்களை சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களை தாசில்தார் மலர்விழி, கிராம நிர்வாக அதிகாரி ரேவதி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் அந்த வெறிநாய் நந்தியநல்லூர், அக்னி, நிம்மேலி கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள கால்நடைகளையும் கடித்துள்ளது.

    எனவே அந்த வெறிநாயை பிடிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×