என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே பெண் மீது தாக்குதல்: வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ் (25). இவர் வேதாரண்யத்தில் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்று பக்கத்து வீட்டில் பேசி கொண்டிருந்தாராம். இதை பார்த்த அவரது சகோதரி உமா (35) ஏன் அங்கு பேசி கொண்டிருக்கிறாய். சாப்பிட்டு விட்டு படு என்றார். இதில் ஆத்திரமடைந்த முருகதாஸ், உமாவை தாக்கினாராம். இதை உமாவின் மகன் சிவமணி(15) தட்டி கேட்டாராம். அவரையும் முருகதாஸ் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த உமா, சிவமணி ஆகிய இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உமா வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகதாசை கைது செய்தனர்.

Next Story