என் மலர்
செய்திகள்

கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் கைது
வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாரை தாக்கிய வெற்றிவேல் என்பவரை கரியாப்பட்டினம் போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
வேதாரண்யம்:
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, கெங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் அருண்குமார்(26). இவர் மருதூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி மணல் அள்ளி கொண்டிருந்த டிராக்டரை அருண்குமார் தடுத்துள்ளார். இதை அறிந்த அதே ஊரே சேர்ந்த வெற்றிவேல்(40) என்பவர் அருண்குமாரை கம்பியால் தாக்கினார். உடன் வந்த பாலமுருகனையும் தாக்கினாராம். காயமடைந்த 2 பேரும் நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் தரப்பினர் தன்னை தாக்கியதாக வெற்றிவேலும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வெற்றிவேலை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Next Story






