என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கத்திரிபுலம் கீழ குத்தகை பகுதியை சேர்ந்தவர் கல்யாண ராமன் (32). இவர் கடை தெருவுக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
பின்னர் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது கருப்பம்புலத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கல்யாண ராமன் படுகாயம் அடைந்தார்.
வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story






