என் மலர்
செய்திகள்

திருவரங்குளம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி
மரத்தில் மோட்டார் சைக்கிளில் மோதியதில் பிறந்த மகளை பார்க்க சென்ற என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி, தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருடைய மகன் பாரதிராஜா (வயது 23). இவருக்கு திருமணமாகி கடந்த 16 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பாரதிராஜா தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பிறந்த தனது மகளை பார்க்க தோப்புக்கொல்லையில் இருந்து அரிமளத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் தோப்புக்கொல்லை– அரிமளம் சாலையில் பூவசரக்குடி என்ற இடத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற பாரதிராஜா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள், வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த மகளை பார்க்க சென்ற என்ஜினீயர் புளியமரத்தில் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story