என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கமுதி பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி மாற்றம்

கமுதி:
கமுதி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி கமுதி ஒன்றிய அ.தி.மு.க. அவைத் தலைவர் முருகேசன் விடுவிக்கப்பட்டு ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்து, அவைத்தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். கமுதி ஒன்றிய இளைஞரணி செயலாளராக கருமலையானும், ராமநாதபுரம் மாவட்ட இளம்பெண், இளைஞர் பாசறை தலைவராக அபிராமம் பேரூராட்சி தலைவர் குமணன், இளைஞரணி மாவட்ட தலைவராக பசும்பொன் ராமகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவராக பம்மனேந்தல் சேகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அபிராமம் நகர் பேரவை செயலாளராக ஏ.கே.சாதிக், கமுதி ஒன்றிய பாசறை செயலாளராக கோவிலாங்குளம் ஜோதி ராமர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக கிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர் முனியசாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி., அமைச்சர் மணிகண்டன், மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கமுதி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காளிமுத்து, கமுதி யூனியன் தலைவர் பாலு உள்பட கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றனர்.