என் மலர்
செய்திகள்

குன்னம் அருகே சாலை விபத்தில் உடல் நசுங்கி சிதைந்து பலியான பெண் அடையாளம் தெரிந்தது
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எரையூர் சின்னாறு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தி ருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
நேற்று காலை மதுவிலக்கு அமலக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் ஆயுதபடை டி.எஸ்.பி. விக் னேஷ்வரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சின்னாறு கிராமம் அருகே சென்று கொண்டு இருந்த போது சாலையில் 48 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அடிபட்டு உடல் நசுங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் விரைந்து வந்து சாலையில் உடல் நசுங்கி நிலையில் கிடந்த பெண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அந்த வழியாக சென்ற பல்வேறு வாகனங்கள் அந்த பெண்ணின் உடலில் ஏறி இறங்கியதால் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த பெண் சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பதும், அவரது மகளை பெரம்பலூர் மாவட்டம் இறையூர் சின்னாறு பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளதும் தெரிந்தது. அங்கு நடைபெற்ற கருமாரி அம்மன் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முயற்சித்த போது வாகனம் மோதி இறந்துள்ளார்.






