என் மலர்
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
பனவடலிசத்திரம் அருகே உள்ளது வடக்கு பூலாங்குளம். சம்பவத்தன்று அய்யாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனம் மற்றும் போலீசார் சாயமலை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள குளத்தில் வடக்கு பூலாங்குளத்தை சேர்ந்த முகேஷ் (வயது21), காளிராஜ் (30), வேலுச்சாமி (30) ஆகிய 3 பேரும் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனராம். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
Next Story






