என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பொள்ளாச்சியில் ஸ்டூடியோ அதிபர் வீட்டில் 14 பவுன் நகை: போலீசார் விசாரணை
By
மாலை மலர்21 Sep 2016 11:47 AM GMT (Updated: 21 Sep 2016 11:48 AM GMT)

பொள்ளாச்சியில் ஸ்டூடியோ அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் ராம்நகரை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 50). இவர் அந்த பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இவர் தினமும் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஸ்டூடியோவுக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்புவது வழக்கம். இவருடன் இவரது மனைவியும் செல்வார்.
சம்பவத்தன்று ஜேசுதாசும் அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு ஸ்டூடியோவுக்கு சென்றனர். பின்னர் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஜேசுதாஸ் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்து கொள்ளையர்கள் அதில் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
கோவை பேரூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45). இந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகள் ரதிபிரியாவுக்கு (17) உடல்நிலை சரியில்லாததால் கோவை அரசு ஆஸ்ப்த்திரிக்கு சிகிச்சை பெற அழைத்து வந்தார். அப்போது புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் வாங்க வரிசையில் மகளுடன் ராஜேஸ்வரி காத்திருந்தார். இந்த சமயத்தில் ராஜேஸ்வரியிடம், பக்கத்தில் இருந்த ஒரு பெண் பேசிக் கொண்டே வந்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து ராஜேஸ்வரி தனது மணிபர்சை பார்த்த போது, அதில் இருந்த ரூ.3500 பணம் மாயமாகி இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி ராஜேஸ்வரி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story
×