என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே வேலைக்கார பெண்ணை தாக்கிய தம்பதி கைது
    X

    வத்தலக்குண்டு அருகே வேலைக்கார பெண்ணை தாக்கிய தம்பதி கைது

    வத்தலக்குண்டு அருகே வேலைக்கார பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காந்திநகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கோமதி. இவர்கள் விளாம்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லதா (வயது 20) என்பவரை கடத்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்த்தனர். லதாவுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை உள்ளது. வீட்டு வேலைக்கு சேர்ந்த லதாவுக்கு கோமதியும், அவரது கணவரும் கடுமையாக வேலை மட்டும் வாங்கி சம்பளம் தராமல் இருந்துள்ளனர்.

    சம்பவத்தன்று தனது சம்பளத்தை லதா கேட்ட போது கணவன்-மனைவி இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து லதா வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி வழக்கு பதிவு செய்து மணி மற்றும் கோமதியை கைது செய்தனர்.
    Next Story
    ×