search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே தம்பதியை தாக்கி நகை-பணம் பறிப்பு
    X

    திருப்பத்தூர் அருகே தம்பதியை தாக்கி நகை-பணம் பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பத்தூர் அருகே தம்பதியை தாக்கி நகை மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    ஜவ்வாது மலையில் உள்ள புதுநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 35). இவர் தனது மனைவி துர்காவுடன் (30) நேற்று மாலை திருப்பத்தூர் ஜே.பி. எம். நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டு இருந்தார்.

    திருப்பத்தூர் அருகே உள்ள சாமியார் கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது மற்றொரு பைக்கில் 3 பேர் வந்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ஜெகதீஸ் வந்த பைக் மீது மோதி தடுத்து நிறுத்தினர். இதில் ஜெகதீஸ் அதிர்ச்சி அடைந்து நின்றார்.

    அந்த 3 பேரும் ஜெகதீசை சரமாரியாக தாக்கினர். முகத்திலும் குத்தினர். இதில் ஜெகதீஸ் நிலை குலைந்தார்.

    அப்போது அந்த 3 பேரும் ஜெகதீஸ் அணிந்திருந்த 1 பவுன் நகையையும், அவர் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×